ஜெயலலிதாவின் சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

 
Jeyalalitha Jeyalalitha

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்கள் அனைத்தும் தமிழக அதிகாரிகள் முன்னிலையில் முறையாக ஆய்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

1991-96ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 27 கிலோ தங்க நகைகள், 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில்,  ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் நில ஆவணங்கள் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்றது. 

இந்த நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்கள் அனைத்தும் தமிழக அதிகாரிகள் முன்னிலையில் முறையாக ஆய்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒப்படைக்கப்பட்ட நகைகள் அனைத்தும், தமிழக அதிகாரிகள் கொண்டு வந்த பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டது.