ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் - தமிழக அரசு சார்பில் மரியாதை

 
Tamilnadu govt

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளயொட்டி தமிழக அரசு சார்பில் அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 

மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அவரது பிறந்த நாளையொட்டி அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.  கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை காமராசர் சாலை, தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர், இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர்  த.மோகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.