ஜெயலலிதா பிறந்தநாளினை சிறப்புடன் கொண்டாடுவோம் - சசிகலா

 
sasikala sasikala

ஒற்றுமையோடு மக்கள் தொண்டாற்றிட, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளினை சிறப்புடன் கொண்டாடுவோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

jayalalitha

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், பெண்ணினத்தை பாதுகாத்திடவும், ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தன் உயிர்மூச்சு உள்ளவரை வாழ்ந்துக் காட்டிய ஒப்பற்ற மக்கள் தலைவி, தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வகுத்துக்கொடுத்த பாதையில், அடிபிறழாமல் அதேவழியில் நாமும் தொடர்ந்து பயணித்திட, சபதம் மேற்கொள்ளும் வகையில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 24-02-2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள், சென்னை போயஸ் கார்டனில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வேதா இல்லத்திற்கு எதிரே அமைந்துள்ள புதிய இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து கழகத்தொண்டர்கள், ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்க இருக்கிறார்.

sasikala

தமிழக மக்களின் அன்பும், ஆதரவும் எந்நாளும் தொடர்ந்திட புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழிவந்த கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையோடு மக்கள் தொண்டாற்றிட, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளினை சிறப்புடன் கொண்டாடுவோம். இந்த பெருமைக்குரிய நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழிவந்த கழகத் தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.