புதுச்சேரியில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரியிலும் சோதனை!

 
ஜெகத்ரட்சகன்

புதுச்சேரியில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் சவிதா மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை என சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.   ஜெகத்ரட்சகனின் வீடு , கல்வி நிறுவனங்கள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள அவரது லட்சுமி நாராயணன் மருத்துவ கல்லூரியில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறை சோதனை காரணமாக கல்லூரிக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் கல்லூரியில் உள்ளவர்கள் வெளியே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர்.