ஜியோ ஹாட்ஸ்டார் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

 
1 1

ஜியோ ஹாட்ஸ்டார் நான்கு தென் மாநிலங்களில் ரூ.12,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.4,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதன் மற்றும் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, நாகார்ஜூனா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

துவக்க நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

"எப்போதும் சொல்வதுதான். உள்ளடக்கம்தான் இப்போது ராஜா. உள்ளடக்கம் நன்றாக இருந்தால் அது எப்போதும் மக்களால் கொண்டாடப்படும். உள்ளடக்கம் நன்றாக இருந்தால் மொழி, இனத்தை தாண்டி அதற்கான வரவேற்பு அனைத்து இடங்களிலும் கிடைக்கும். அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

இன்றைய சூழலில் புதிய தொழில்நுட்பங்களை கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம், அவசியம். எதை கற்றுக்கொள்ள வேண்டும், எப்படி கற்றுக்கொள்ள வேண்டும், அதை எப்படி கலையாக கொண்டுவர வேண்டும் என்பதற்கு கமல் சார் ஒரு சிறந்த உதாரணம், நம் எல்லோருக்கும் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். இப்போதும் கமல் சார் கற்றுக்கொள்கிறார்.

தற்போதும் திரைத்துரையில் வரும் புதிய அம்சங்களை பரிசோதித்து பார்ப்பதில், கற்றுக்கொள்வதில் முதல் ஆளாக இருக்கிறார். தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு பெரிய திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் முன்னோடி முயற்சியை கமல்ஹாசன் 2012 ஆம் ஆண்டே மேற்கொண்டார். ஓடிடி சினிமாவுக்கு மாற்றாகாது." என தெரிவித்தார்.