தமிழக வனத்துறையில் ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் வேலை.. தேர்வு கிடையாது..

 
அரசு ஊழியர்கள் வேலை நேரம்

தமிழக வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் தேர்வுகள் இன்றி நிரப்பப்பட உள்ளன.

அரசுப் பணியிடங்கள் பெரும்பாலும் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே..  ஆனால் சில குறிப்பிட்ட பணியிடங்கள் தேர்வுகள் இன்று நிரப்பப்படுகின்றன. அந்தவகையில்  தமிழக வனத்துறையில் மாதம் ரூ. 75 ஆயிரம் ஊதியத்தில் 2  பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   விருப்பமுள்ளவர்கள் 04.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் :

வேலைவாய்ப்பு

பணியிடங்கள்:  Legal Advisor பணிக்கென 2  காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில்  Master of Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.   

பணி அனுபவம் : சம்பந்தபட்ட துறையில் 5 ஆண்டு கால முன்அனுபவம் கொண்டிருக்க வேண்டும் . (  அதாவது Environment, Forest and Climate Change – சுற்றுச் சூழல் , வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம்  போன்ற  துறையில் 5 ஆண்டுகால முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். )

ஊதியம் :    மாதம் ரூ.75,000/- முதல் ரூ.1,00,000/- வரை

தமிழக வனத்துறையில் ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் வேலை.. தேர்வு கிடையாது..

தேர்வு முறை –  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.   

விண்ணப்பிக்கும் முறை :  ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  Environment, Climate Change and Forest Department, Secretariat, Chennai-9.  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் .   04.06.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் திட்டவட்டமாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு https://www.forests.tn.gov.in/ என்ற இணையதளத்தில்  தெரிந்து கொள்ளலாம்..