ரூ. 75.07 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் பயனாளிகளுக்கு புனரமைப்பு பணிகள்!!

 
govt

கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் பயனாளிகளுக்கு புனரமைப்பு பணிகள் ரூ. 75.07 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுக்குறித்து நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் பராமரிக்கப்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் சென்னை நீங்கலான நகர்ப்புரப் பகுதிகளுக்கும், ஊரகப் பகுதிகளுக்கும் போதுமான அளவில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நகராட்சி, இலுப்பூர், கீரனூர், அன்னவாசல் பேருராட்சிகள் மற்றும் 15 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சராசரியாக நாளொன்றுக்கு 18.5 மில்லியன் லிட்டர் குடிநீர் 2,55,018 மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

tn

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நகராட்சி, இலுப்பூர், கீரனூர் அன்னவாசல் பேரூராட்சிகள் மற்றும் 15 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை மேம்பாடு செய்து கூடுதலாக குடிநீர் வழங்க மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.75.07 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை செயல்படுத்த நிருவாக அனுமதி வழங்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளர்கள்.

tn govt

மேற்படி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் பயனாளிகளுக்கு, நாளென்றுக்கு 21.82 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் புதியதாக நீருறிஞ்சு கிணறு, மின்இறைப்பான்கள் மற்றும் அடிக்கடி நீர்க்கசிவு ஏற்படும் குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் பதித்தல் ஆகிய புனரமைப்பு பணிகள் ரூபாய் 75.07 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் வடிவமைக்கப்பட்ட அளவான, நாளென்றுக்கு 21.82 வழங்கப்படும்.2024-ஆம் ஆண்டிற்குள் இதர பயனாளிகளுக்கு, மில்லியன் லிட்டர் குடிநீர் இதன் மூலம் இக்கூட்டுக் குடிநீர் திட்டத்தினால் பயன்பெறும் மக்களுக்கு கூடுதலாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏதுவாகும்."என்று குறிப்பிட்டுள்ளார்.