“குழந்தைக்காக தான் போராடுகிறேன்”- கதறும் ஜாய் கிரிசில்டா
ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் மனுதாக்கல் தன்னை குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டா-வுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜாய்கிரிசில்டா, "நான் ஏதும் பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை. நீதி வேண்டும் என்பதற்காக தான் போராடுகிறேன்... குழந்தைக்காக தான் போராடுகிறேன். கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து 20 நாட்கள் ஆகிவிட்டது. செல்வாக்கு இருப்பதினால் புகார் பதிவு செய்யவில்லை. காசு பணம் இருந்தால் தப்பு செய்துவிட்டு தப்பிக்கலாம் என நினைக்கிறார்கள், என்னுடைய புகார் எங்கு உள்ளது எனக்கு தெரியவில்லை, குழந்தைக்காக இன்னும் பதில் சொல்லவில்லை. நான் தப்பாக ஏதும் போடவில்லை
குழந்தையின் தந்தை மாதப்பட்டி ரங்கராஜன்தான், நான் போராடுவதால் என்னை அவதூறாக பேசுகிறார்கள். குழந்தைக்காக நான் எந்த கட்டத்திற்கும் சென்று போராடுவேன். இரண்டு மாதங்களாக என்னுடன் ரங்கராஜ் மாதமாக பேசவில்லை. நான் எந்த பொய்யான குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. சமூக வலைதள கருத்துக்களை நான் திரும்ப பெற மாட்டேன். குழந்தையினுடைய அப்பா மாதப்பட்டி ரங்கராஜ்தான்” என தெரிவித்தார்.


