"மதுரை எய்ம்ஸ் பணி தாமதம்தான்"- மக்களவையில் ஒப்புக்கொண்ட ஒன்றிய அமைச்சர்

 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்?- மத்திய அரசு விளக்கம்

மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் மிக விரைவில் மதுரையின் கட்டுமான பணிகள் தொடங்கும் என்ற உறுதியையும் கொடுக்கிறேன் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ பி நட்டா மக்களவையில் பதிலளித்துள்ளார்.

மக்களவையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விவகாரத்தை எழுப்பி திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா உரையாற்றினார். அப்போது,  “அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி அதற்கு பிறகு கூடுதல் நிதி ஒதுக்கீடு அல்லது மேற்கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்வது போன்ற எந்த பணிகளும் நடத்தப்படவில்லை ஏன்? 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. இதுதான் நீங்கள் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் அளிக்கும் மரியாதையா?  தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. இன்றைய விவாதத்தில் மதுரையை எய்ம்ஸ் பற்றிய ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்பது மிகவும் வேதனையை தருகிறது” 
எனக் கூறினார்.

Image


மக்களவையில் திமுக எம்.பி., ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, “மதுரை எய்ம்ஸ் பணி தாமதத்தை ஒப்புக்கொள்கிறேன். சில தொழில்நுட்பக்கோளாறு காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.