மு.க.அழகிரி தொடர்பான வழக்கில் 12ஆம் தேதி தீர்ப்பு

 
tn

கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மேலூர் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக குற்றச்சாட்டை எழுந்தது.இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அழகிரி உள்ளிட்ட 14 பேர் மீது மதுரை மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  ஆரம்ப காலத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது மு.க .அழகிரி உட்பட யாரும் ஆஜராகவில்லை. அத்துடன் மதுரையில் தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு முன் ஜாமின் அளிக்கப்பட்டது. இருப்பினும்  தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. 

tn

இந்நிலையில் 2011 தேர்தலில் தாசில்தாரை தாக்கியதாக மு.க.அழகிரிக்கு எதிராக பதிவான வழக்கில் 12ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர்.  

tn

மேலூர் அருகே வல்லடிகாரர் கோயிலில் தாசில்தார் காளிமுத்து உள்ளிட்டோரை தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி, மன்னன், ரகுபதி உட்பட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.