கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கும் பிப்.19 வரை நீதிமன்ற காவல்

 
Fisherman Fisherman

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கும் பிப்ரவரி 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடி தலைமன்னார் இடையே வழக்கம் போல் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்ததோடு, அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் சிறைப்பிடித்துச் சென்றனர். 
 
இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கும் பிப்ரவரி 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து 14 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.