“முட்டிப்போட்டு கைய தூக்குடா”- சீனியரை ராகிங் செய்த ஜூனியர் மாணவர்கள்

 
ச் ச்

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில்  சீனியர் மாணவர் மீது  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மதுக்கரையில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர் மீது ஜூனியர் மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொழில்நுட்பக் கல்லூரியில்  சீனியர் மாணவரை மண்டியிட்டு கையை தூக்கச் சொல்லி தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட சீனியர் மாணவர், விடுதியில் ஜூனியர் மாணவர்களின் அறைக்குள் சென்று பணத்தை திருடியதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து பெற்றோருடன் நாளை கல்லூரிக்கு வர வேண்டுமென ஜூனியர் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.