#JUST IN : 2வது திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா..!

 
1 1

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிப்பு ‘Ye Maaya Chesave’. இதில் சிம்பு மற்றும் த்ரிஷா கதாபாத்திரத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா நடித்திருந்தார்கள். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் படப்பிடிப்பில்தான் நாக சைதன்யா – சமந்தா இருவரும் காதல் உருவானது. இருவருமே திருமணம் செய்து சில வருடங்களில் விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.

தற்போது நாக சைதன்யா மீண்டும் திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமந்தா திருமணம் செய்து கொள்ளவில்லை.

நடிகை சமந்தாவை இயக்குனர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று கோவை ஈஷாவில் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சமந்தா-ராஜ் நிடிமொரு திருமணம் நடப்பதாகவும், இதில் வெகு சில உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

சமந்தா, ராஜ் நிடிமொரு திருமணம் குறித்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, இருவர் இடையே இருக்கும் வயது வித்தியாசம் குறித்தும் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். சமந்தா, 1987ஆம் ஆண்டு, ஏப்ரல் 28ஆம் தேதி பிறந்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது இவரது வயது 2025ஆம் ஆண்டின் படி 38 என்று தெரிகிறது. இதையடுத்து, ராஜ் நிடிமொரு 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்துள்ளார். இவருக்கு, 2025ஆம் ஆண்டின் படி 46 வயது ஆகிறது. இருவருக்கும், 8 வயது வித்தியாசம் இருப்பதை ரசிகர்கள் கோடிட்டு பேசி வருகின்றனர்.

சமந்தா, The Family Man என்கிற வெப் தாெடரில் நடித்திருந்தார். இந்த தொடரை இயக்கியவர்தான், ராஜ் நிடிமொரு. இந்த ஷூட்டிங் செட்டில் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.