#JUST IN : அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எப்படி இருக்கிறார்... டிஸ்சார்ஜ் எப்போது? - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

 
1 1

அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அ.தி.மு.க தலைமை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலேயே இருந்து வந்த அவர் தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குடும்பத்தினர் உடனிருந்து அவரை கவனித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உடல் நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 16 ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அப்பல்லோ மெட் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார், சிகிச்சைக்குப் பிறகு அவர் நல்ல குணமடைந்து வார்டுக்கு மாற்றப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

1