#JUST IN : அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் துரோகம் செய்துவிட்டனர்: இ.பி.எஸ்..!

 
eps

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்குத் துரோகம் இழைத்துள்ளனர். கட்சியின் கொறடா உத்தரவை மீறி, சட்டத்திற்குப் புறம்பாக அவர்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக அரசுக்கு வாக்களித்தது குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்தத் திடீர் மாற்றத்திற்கு பின்னால் பெரும் பேரம் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், த.வெ.க தரப்பிலிருந்து 6 அமைச்சர்கள் பதவிகள், 10 வாரியத் தலைவர்கள் பதவிகள் தருவதாக பேரம் பேசப்பட்டுள்ளது. பதவி ஆசை காரணமாகவே அவர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் முடிவை எடுத்துள்ளனர் என்று பரபரப்பு புகாரை முன்வைத்தார்.