#JUST IN : மக்கள் வெள்ளத்தின் நடுவே.."பரப்புரையை தொடங்கிய விஜய்"..!
தவெக தலைவர் விஜய் திருச்சியில் பேசியபோது, “போருக்கு செல்வதற்கு முன்பு உங்களை பார்க்க வந்துள்ளேன். அரசியலில் களம் இறங்க அண்ணா முடிவெடுத்த இடம் திருச்சி. பெரியார் வாழ்ந்த மண் திருச்சி. கல்வி மதச்சார்பின்மைக்கு பெயர் பெற்ற இடம் திருச்சி.” என்று பேசினார்.
அடுத்த ஆண்டு நடக்கப்போவது ஜனநாயக போர் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நல்ல காரியத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறேன். தொண்டர்களை பார்க்கும் போது பரவசமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் உள்ளது. போருக்கு முன் குலதெய்வத்தை கும்பிட வருவது போல், தேர்தலுக்கு முன் மக்களை பார்க்க வந்துள்ளேன். திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனை என்றார்.
திருச்சியில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது ஆடியோவில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் சத்தம் சரியாக கேட்கவில்லை. இதனால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


