#JUST IN : உடன்பிறப்பே வா -100 தொகுதிகள் நிறைவு..!

 
1 1

தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பு நிகழ்ச்சியின் வாயிலாக, இதுவரையில் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் அவர். நாள்தோறும் நடக்கும் சந்திப்புகளால், அறிவாலயம் அமைந்திருக்கும் அண்ணாசாலையே பரபரப்பாகத்தான் இருக்கிறது. 


இந்நிலையில் இன்றுடன் உடன்பிறப்பே வா ஒன்-டூ-ஒன் சந்திப்பில் 100 தொகுதிகள் நிறைவு செய்துள்ளார்.ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 1.30 மணி நேரம் ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். நிர்வாகிகள் முன்வைக்கும் கோரிக்கைகள், அரசு சார்ந்த கோரிக்கைகள், கட்சி சார்ந்த கோரிக்கைகள் எனப் பிரிக்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது.இந்த சந்திப்பு நிர்வாகிகளுக்கு  மிக பெரிய உத்வேகத்தை கொடுக்கும்..
நிர்வாகிகளும் களத்தில் சிறப்பாக செயல்படுவார்கள், திமுக 200+ தொகுதிகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது