#JUST IN : 10 நிமிடங்களுக்கு ஒருமுறை முதல்வருக்கு அப்டேட்: திருவள்ளூர் வாயு கசிவு குறித்து அமைச்சர் குமார் தகவல்!
Jun 21, 2026, 16:38 IST1782040083375
அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அமைச்சர் குமார் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து அமைச்சர் குமார் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
திருவள்ளூரில் அம்மோனியா வாயுக் கசிவால் துயரமான சம்பவம் நடந்துள்ளது. 60 பெண்கள், 4 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறால் பதப்படுத்தும் ஆலையில் வாயு கசிவால் தொழிலாளர்கள் பலியான செய்தியறிந்து முதல்வர் விஜய் மிகவும் வேதனையடைந்தார். சம்பவம் தொடர்பாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை முதல்வருக்கு தகவல் அளித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்

