#JUST IN : காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!

 
1 1
காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி. 1998 - 2017 மற்றும் 2019- 2022 வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகச் சோனியா இருந்துள்ளார். குறிப்பாக 1998 - 2017 காலகட்டத்தில் காங்கிரஸ் சிக்கலான நிலையில் இருந்த நிலையில், வெற்றிகரமாகக் காங்கிரஸை வழிநடத்தி 2004 தேர்தலில் வெற்றி பெற வைத்தவர் சோனியா காந்தி.79 வயதான சோனியா காந்தி, கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பு காரணமாகத் தீவிர அரசியலில் இருந்து சற்று விலகியே இருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராவ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். சோனியா காந்திக்கு இருமல் பிரச்சினை உள்ளது என்றும், டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினை காரணமாக அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் நுரையீரல் மருத்துவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.