#JUST IN : ஹேமமாலினி கார் விபத்தில் சிக்கியது..!

 
1 1

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பலியானது குறித்து உண்மை கண்டறிய தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் குழுவை பாஜ அமைத்தது. இந்த குழுவினர் ஏற்கனவே அறிவித்தபடி கரூரில் தமது ஆய்வை தொடங்குகின்றனர்.அதற்காக ஹேமமாலினி தலைமையிலான இக்குழு கோவை வந்தது.

பாஜக எம்பி ஹேமமாலினி தலைமையில் அணுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஶ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புத்த மகேஷ் குமார் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.ஹேம மாலினி தலைமையிலான பாஜக குழுவினர் கோவைக்கு விமானம் மூலம் இன்று வந்தனர். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு அவர்கள் சாலை மார்க்கமாக கரூர் புறப்பட்டனர்.

 

கரூர் கிளம்பிச் சென்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழுவினரின் கார் அடுத்தடுத்து மோதிக் கொண்டது. சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் பகுதியில் விபத்து ஏற்பட்ட நிலையில் பாஜக நிர்வாகியின் காரின் முன்புற பகுதி சேதம். ஹேமமாலினி சென்ற காரின் பின்பகுதியில் லேசான சேதமடைந்தது. யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில் ஹேம மாலினி அதே காரில் கரூர் புறப்பட்டு சென்றார்.