#JUST IN : இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
டிட்வா புயல் தாக்கம் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்து வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டத்திற்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், இன்று (டிசம்பர் 3) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இன்று (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, தி.மலை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது.
மேலும், கனமழை எதிரொலியாக இன்று அண்ணா மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்றைய தினத்தில் நடைபெற இருந்த தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மேற்கண்ட பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


