#JUST IN : இல்லத்தரசிகள் ஷாக்..! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை...!!

 
Q Q
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையாகிறது.
இன்று காலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று மாலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 அதிகரித்து, கிராம் ரூ.11,500க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையாகிறது.
இன்று காலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் தற்போது மேலும், ரூ.600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.