#JUST IN : 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு என்பது உண்மையா..??

 
Q Q

தமிழை தாய் மொழியாக கொண்டிராத, 10-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

உண்மை என்ன?

இது பழைய செய்தி. மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2020 முதல் 2023-ம் ஆண்டு வரை விலக்கு அளித்து இருந்தது மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம்.

பள்ளிகளின் கோரிக்கையால் 2023-24 கல்வியாண்டிற்கு மட்டும் இவ்விலக்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2025ம் ஆண்டு விலக்கு அளிக்கப்படவில்லை.

மார்ச்/ஏப்ரல் 2025 10- வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8,86,184. இதில், பகுதி 1-ல் தமிழ்மொழிப்பாடம் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: 8,86,089. கடந்த ஆண்டில் 95 மாணவர்கள் மட்டுமே பகுதி I-ல் பிற மொழிப் பாடங்களை எழுதியுள்ளனர். இவர்கள் 9ம் வகுப்பு வரை வேறு மாநிலங்களில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement