#JUST IN: தவெக-வில் தேசிய கட்சி இணையப் போகிறது.! பரபரப்பைக் கிளப்பிய நாஞ்சில் சம்பத்.!

 
Q

சென்னையில் செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறியதாவது: தவெகவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேசியக் கட்சியும் வரும், மாநிலக் கட்சியும் எங்கள் கூட்டணிக்கு வரும்.

தமிழக அரசு தாக்கல் செய்தது பட்ஜெட்டே கிடையாது. அது ஒரு அறிக்கை.

பட்ஜெட்டில் கவர்ச்சித் திட்டம் ஒன்றுமே இல்லை. அதுகூட எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியவில்லை. ஒரு திட்டமும் அறிவிக்கவில்லை. எதுவும் அறிவிக்க முடியாது. இது இடைக்கால பட்ஜெட். எதையும் புதிதாக அறிவிக்க முடியாது. இருக்கிற நிலையைச் சொல்ல முடியும். அவ்வளவுதான் இந்த பட்ஜெட். இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.