#JUST IN : இனி நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த கூடாது - நீதிமன்றம் அதிரடி..!
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டம் கடந்த சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது எப்படி , என்னென்ன வழிகாட்டு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது குறித்து ஆய்வு செய்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதி அரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சூழலில் இது போன்று பொதுக் கூட்டங்கள், பேரணிகள் போன்றவை சாலைகளில் நடத்தப்படும் போது என்னென்ன வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிடும் வரை, தவெக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சாலைகளில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, சாலைகளில் அரசியல் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ரோட் ஷோக்கள் நடத்துவதற்கு அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிடும் வரை, தவெக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கதிரேசன் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் இன்று (அக்.3) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மனுவாக நீதிபதிகள் விசாரணை நடத்தினர். கூட்ட நெரிசலுக்கு நெறிமுறைகள் விதிப்பது தொடர்பான மனுவை எடுத்துக் கொண்ட நீதிபதிகள், 'கட்சிகளை கடந்து பொதுமக்கள் நலனில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்தக்கூடாது' என்றனர்.
மேலும் பாதுகாப்பு அளிப்பதில் கட்சி பேதம் கூடாது. விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்த இடம் மாநில நெடுஞ்சாலையா? தேசிய நெடுஞ்சாலையா? எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.


