#JUST IN : சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட் அறிவிப்பு..! சென்னையில் சில தனியார் பள்ளிகளில் இன்று அரை நாள் விடுமுறை..!
டிட்வா புயல் கடந்த மாதம் (நவம்பர்) 27-ந் தேதி முதல் 2 நாட்களுக்கு இலங்கையை துவம்சம் செய்தது.இலங்கை முழுவதும் வெள்ளக்காடாக இப்போதும் காட்சியளிக்கிறது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. இலங்கையில் டிட்வா புயல் நல்ல மழையை கொட்டிவிட்டு, அடுத்ததாக தமிழக கடலோரப்பகுதிகளில் பயணத்தை தொடங்கியது. ராமேசுவரம், ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகனமழை வரையும், தென்மாவட்டங்களில் கன முதல் மிககனமழையும் பெய்தது.
இந்நிலையில் இன்று இந்த டிட்வா புயல் சென்னைக்கு 50 கி.மீ தூரத்திலேயே நீடிக்கிறது. திருவள்ளூர், சென்னைக்கு இன்று (டிச.,01) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று (டிச.01) காலை முதல் தொடர் மழை பெய்யும் நிலையில், ஒரு சில தனியார் பள்ளிகள் தாமாக முன்வந்து அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளனர். சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


