#JUST IN : நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

 
Q Q

திட்வா புயல் பாதிப்பு காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.1) விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழுந்தது. தற்போது டிட்வா புயல் சென்னை தெற்கு-தென்கிழக்கில் 140 கி.மீ தொலைவில், புதுச்சேரி கிழக்கு-தென்கிழக்கில் 90 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.