#JUST IN : நிர்வாகிகள் சந்திப்பில் திடீரென கண் கலங்கிய செங்கோட்டையன்..!

 
1 1

த.வெ.க. திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், திருப்பூர் தெற்கு ரோட்டரி அரங்கில் நடந்தது. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றிவாகை சூடப்போகிறது என்பதை இந்த கூட்டத்தை பார்க்கும்போதே உணரமுடிகிறது. தமிழகத்துக்கு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டும் தேவையில்லை. விஜய்தான் முதல்வராகவேண்டும் என்கிற உணர்வோடு, அனைவரும் கூடியிருக்கின்றனர்.இந்த கூட்டத்தை பார்த்து ஆளும், எதிர்க்கட்சியினர் தேர்தல் களத்தில் நிற்கலாமா? வேண்டாமா? என்ற அச்சத்தில் உள்ளனர். அவர்கள் பிப்ரவரி மாதத்துக்கு பின் தேர்தலில் நிற்க ஆள் தேடுவார்கள். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்குப்பிறகு, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற விஜய் வந்திருக்கிறார். தமிழகத்தில் மீண்டும் ஒரு மாற்றம் நிகழவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். 

ஆண்டுக்கு ரூ.1000 கோடி சம்பாதிப்பவர் சம்பாத்தியம் தேவையில்லை மக்கள் நலன்தான் முக்கியம் என்று வந்துள்ளார். மே மாதத்துக்குப்பின் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமையும். பணம் இல்லாமல் சேர்ந்த கூட்டம் இது. இங்கு நீதி, நியாயம் இருக்கிறது. தமிழகத்தில் ஜனவரி 15-ந்தேதிக்கு பிறகு நிறைய மாற்றங்கள் நடக்கும். எப்போது தேர்தல் வந்தாலும் தமிழகத்தின் நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்.

வழி தெரியாமல் நின்ற எனக்கு வழிகாட்டியவர் விஜய்.. இன்றைக்கு சொல்கிறேன்.. ‘எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்’. கேட்காமலே நமக்கு கொடுக்கக்கூடிய தளபதி நமக்கு கிடைத்துள்ளார்; அவர்தான் நமது வெற்றி தளபதி... ஜெயலலிதாவுடன் பயணித்தபோது நான் ஒருவரை அடையாளம் காட்டினேன்... ஆனால் அவர் இன்று என்னை அடையாளம் காட்டிவிட்டு சென்றுவிட்டார். நல்ல இடத்திற்கு போங்கள் என அடையாளம் காட்டியுள்ளார். இதனால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அவருடன் பயணித்தால் நான் பின்னோக்கி சென்றிருப்பேன்; ஆனால் உங்களுடன் (தவெக) பயணிப்பதால் முன்னோக்கி சென்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.