#JUST IN : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இருந்து விலகினார் சுந்தர் சி..!

 
1 1

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 


அதில் நடிகர் ரஜினிகாந்தின் 173வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார். சுந்தர் சி 1997ம் ஆண்டு ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் என்ற ப்ளாக்பஸ்டர் படத்தை இயக்கியவர். தனது 29 வயதிலே அருணாச்சலம் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை தந்தவர்.  இப்படத்தின் ஷுட்டிங் அடுத்த வருடம் துவங்கவுள்ளது. மேலும், 2027 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'தலைவர் 173' படத்தினை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் படக்குழு தெரிவித்தது.சுந்தர் சி பாணியில் கலகலப்பான பேமிலி டிராமாவாக இப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பபட்டது.

இந்நிலையில், சற்று முன் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர். சி அறிவித்துள்ளார். சில தவிர்க்க முடியாத காரணத்தினால், ரஜினியின் 173வது படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.