JUST IN தக் லைஃப் சிறப்பு காட்சிக்கு அனுமதி..

 
Thug life Thug life

தக் லைஃப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ்  இண்டர்நேஷல் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிடோர் பலர் நடிப்பில்  உருவாகியுள்ள தக் லைஃப்  திரைப்படம் உலகெங்கிலும் நாளை வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் பாடல்கள், ட்ரெய்லர்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.  இதனிடையே கன்னடமொழி குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையாகியுள்ள் நிலையில், கர்நாடகாவில் இந்தப்படம் நாளை வெளியாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

thug life

இந்தப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழக்கக்கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று நாளை ஒருநாள் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.  அதன்படி நாளை ஒரு நாள் மட்டும் 5 காட்சிகள் திரையிடலாம் என்றும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதிக்காட்சி இரவு 2 மணிக்குள் நிறைவு பெற வேண்டும் என்றும் தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.