#JUST IN : தமிழ்நாடு பாஜக தலைவர்கள் திடீர் டெல்லி பயணம்..!
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை இடையிலான மோதலும் முடிவுக்கு வந்தது. இருவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வருகை காரணமாக இந்த இணக்கம் ஏற்பட்டது. இருந்தாலும் தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருந்து வருகிறது. படிப்படியாக அண்ணாமலை ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் பாஜகவின் உயர்மட்ட நிர்வாகிகளின் கூட்டம் நாளை நடக்கவுள்ளது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர்களை டெல்லி மேலிடம் அவசரமாக அழைத்துள்ளது. இதனால் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அவசர அவசரமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளனர்.தமிழக பாஜகவில் உள்ள உட்கட்சி பிரச்சினை, அதிமுக உடனான கூட்டணி விவகாரங்கள் குறித்து ஆலோசனை 234 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறும் என தகவல்


