#JUST IN : மறுஅறிவிப்பு வரும் வரை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது - விஜய் அறிவுரை..!

 
1 1


தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வரும் வாரங்களில் விஜய்யின் பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம். வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் எந்த முன்னேற்பாடுகளும் செய்ய வேண்டாம் என நிர்வாகிகளுக்கு தலைமை அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் கட்சியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளதாம். மேலும் கரூரில் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களி விவரங்கள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கரூருக்கு பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.