#JUST IN : வங்கியில் பெறப்பட்ட ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி - பாமக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

 
1

பாட்டாளி மக்கள் கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை சென்னையில் இன்று வெளியிட்டது. இதனை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். 11 பக்க கொண்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்

  • தனிநபர் வரி விலக்கு ரூ.10 லட்சம் ஆக உயர்த்தப்படும்
  • மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மாதம் ரூ.3000ஆக உயர்த்தப்படும்.
  • ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி 10% ஆண்டுக்கு வழங்க வலியுறுத்தப்படும்.
  • கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும்.
  • உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
  • சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 6000-லிருந்து ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். ஒவ்வொரு உழவருக்கும் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.
  • இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
  • தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள 3 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். அதே போல் இந்தியா முழுவதும் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பைச் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு வலியுறுத்தப்படும்.
  • பெண்கள் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்படும்
  • மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரி பகிர்வு
  • நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு
  • திருக்குறள் தேசிய நூலாக்க பரிந்துரை
  • நியாவிலைக்க கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்.
  • பொதுத்துறையில் வங்கியில் பெறப்பட்ட ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி
  • மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் நியாயமான பங்கை மாநிலங்களுக்கு கொடுக்க பாமக பாடுபடும்.
  • கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.