#JUST IN : பிளஸ் 2 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?
May 8, 2026, 09:55 IST1778214308458
2025-26ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், 95.20 சதவீத மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 93.19 சதவீத மாணவர்களும், 97 சதவீத மாணவிகள் அடங்குவர்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை காட்டிலும் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவர். அந்த வகையில் கடந்த ஆண்டில் 3.81 சதவீதம் அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
மாணவர்கள் தேர்ச்சி – 93.19%
மாணவிகள் தேர்ச்சி – 97%
பிளஸ் 2 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?
பாட வாரியாக தேர்ச்சி சதவீதம்
கணினி அறிவியல் 99.84%
வணிகவியல் 97.55%
கணக்குப் பதிவியல் 98.04%
வரலாறு 97.90%
தாவரவியல் 98.62%
விலங்கியல் 98.69%

