பேடிஎம் என்ற ஆப் உள்ளதை போல பே பிஎம் ஆப் இந்தியாவில் உள்ளது - அமைச்சர் தாக்கு..!

 
1

 அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன் சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்து பேசியதாவது:

இந்த உலகத்திலேயே ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஒரு கட்சிக்கு தகுதி இல்லை என்றால், அது பாஜ தான். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களால் ஊழல்வாதிகள் என்று வழக்கு போடப்பட்ட 25 நபர்கள் பாஜவின் வாஷிங் மெஷின் என்ற திட்டத்தால் அனைவரும் சுத்தமாகி விட்டார்கள். தேர்தல் பத்திரம் மூலம் லாபமே இல்லாத பல கம்பெனிகள், பல நூறு கோடிகளை பாஜ அரசுக்கு தானமாக கொடுத்துள்ளன. மேலும், யாரெல்லாம் ஐடி, இடி, சிபிஐ மூலம் வழக்கு விசாரணையில் மாட்டிக் கொண்டார்களோ, அவர்கள் எல்லாம் பே டிஎம் என்பது போல பே பிஎம் என்கிற திட்டத்தில் தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துகிறார்கள்.

பேடிஎம் என்ற ஆப் உள்ளதைப்போல பே பிஎம் ஆப் இந்தியாவில் உள்ளது. எப்பவெல்லாம் பிரச்னை வருகிறதோ அப்போதெல்லாம் ஐடி, ஈடி, சிபிஐயில் இருந்து தப்பிக்க ரூ.56 கோடி கட்ட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தத்திற்கு ரூ.176 கோடி கட்ட வேண்டும். இதெல்லாம் உண்மை. அப்படி பணம் செலுத்தி விட்டால் அவர்கள் மேல் இருந்த வழக்குகள் எல்லாம் ரத்து செய்யப்படும். இதன் மூலம் ‘பே பிஎம்’ திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த பாஜ மோடி அரசு இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்கிற ஒரு நாடும், இந்திய சட்டமைப்பும் என்கிற மக்களாட்சி முறையும் நீடிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.