#JUSTIN : தவெக தலைவர் விஜய்க்கு பிரமாண்ட மாலை - 4 பேர் மீது வழக்கு பதிவு..!
Updated: Sep 22, 2025, 11:09 IST1758519567016
விஜயை வரவேற்கும் விதமாக கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து திருவாரூர் தவெக நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். தனது பிரசார வாகனத்தில் நின்றபடி அந்த மாலையை விஜய் ஏற்றுக்கொண்டார்.
இதற்கிடையே, திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவின் கீழ் ஜே.சி.பி உரிமையாளர் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


