மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து!

 
Annamalai

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.  இந்தியப் பொருளாதாரத்தை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்கும், நமது இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் அவர் விதிவிலக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தேச சேவையில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


இந்த நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நமது நாட்டின் பொருளாதாரத்தை உலக அளவில் புதிய உயரத்துக்குக் கொண்டு சென்ற பெருமைக்குரிய, நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பு மக்களுக்குமான வாய்ப்புகளை உறுதி செய்ய மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையவும், அவர் நீண்ட ஆயுளுடன், நிறைந்த ஆரோக்கியத்துடன் மக்கள் பணி தொடரவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.