டாக்டர் ஹெச்.வி.ஹண்டேவின் பிறந்த நாள் சிறக்க வாழ்த்துக்கள் - அண்ணாமலை

 
Annamalai Annamalai

முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டேவின் பிறந்த நாளையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களது அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றியவரும், தலைசிறந்த மருத்துவருமான ஐயா டாக்டர் ஹெச்.வி.ஹண்டே அவர்களது 97 ஆவது பிறந்த தின விழா இன்று கொண்டாடப்படுகிறது என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிறந்த நாள் விழா சிறக்க தமிழக பாஜக  சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மிகச் சிறந்த தேசியவாதியாகவும், சிந்தனைவாதியாகவும் விளங்கும் ஐயா திரு @DrHVHande1 அவர்கள், தூயதோர் அரசியலை தமிழகம் மீண்டும் பெற, மேலும் பலப் பல ஆண்டுகள் நமக்கெல்லாம் நல்வழிகாட்டியாகத் தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.