சுப்பிரமணிய சிவாவின் நினைவை போற்றி வணங்குவோம் - அண்ணாமலை

 
annamalai annamalai

சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சுவாமியின் பிறந்த நாளையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 

சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சுவாமியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 


இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரும், பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் இணைந்து தமிழகத்தின் தேசிய மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அழைக்கப்பட்டவரும், தம் மேடைப் பேச்சுக்கள் மற்றும் நூல்கள் மூலம் பெரும் புரட்சி செய்தவருமான சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு தினம் இன்று. தாய் நாட்டுக்காக பல இன்னல்களை எதிர்கொண்டும், கலங்காமல் தன் இறுதி மூச்சு வரை இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட சுப்பிரமணிய சிவா அவர்களது நினைவைப் போற்றி வணங்குவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.