திமுகவினரின் சொத்துக்கள் குறித்து சிபிஐ-யிடம் புகார் அளிப்பேன் - அண்ணாமலை அதிரடி!

 
Annamalai

திமுகவினரின் சொத்துக்கள் சம்பந்தமாக சிபிஐ-யிடம் புகார் அளிக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன்  இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி,  தமிழ் புத்தாண்டு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். செய்தியாளர்கள் முன்னிலையில் திமுகவினரின் ஊழல் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாசித்தார். அப்போது திமுக பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஷெல் கம்பெனி 200 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார். 

இந்நிலையில், இது தொடர்பாக சிபிஐ-யிடம் புகார் அளிக்கவுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். திமுகவினரின் சொத்து பட்டியல் தொடர்பான ஆதாரங்களுடன் சிபிஐ-யிடம் புகார் அளிக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்ச் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.