காமராஜர் சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை
கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல் அவரது பிறந்த நாளையொட்டி பலரும் சமூக வலைதளங்களில் புகழாரம் சூட்டியுள்ளார். இந்நிலையில், சென்னையில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு தமிழக பாஜகவினர் மரியாதை செலுத்தினர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தமிழகத்தின் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட ஐயா காமராஜர் பிறந்த தினமான இன்று, @BJP4Tamilnadu சார்பாக, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
— K.Annamalai (@annamalai_k) July 15, 2023
வறுமையின் காரணமாக, ஏழை எளிய குழந்தைகளுக்கு எட்டாக் கனியாக இருந்த… pic.twitter.com/SjPfxVG26T
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தமிழகத்தின் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட ஐயா காமராஜர் பிறந்த தினமான இன்று, @BJP4Tamilnadu சார்பாக, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். வறுமையின் காரணமாக, ஏழை எளிய குழந்தைகளுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வியை, அனைவருக்கும் பொதுவானதாக்கி, பள்ளிகளில் மதிய உணவும் வழங்கி, பள்ளிக் குழந்தைகளின் பசி போக்கிய படிக்காத மேதை. பெரும் பதவிகள் தேடி வந்தும், அரியணைகள் மீது நாட்டமில்லாமல், பல தலைவர்களை உருவாக்கிய கிங்மேக்கர். பல அணைகள், அரசு தொழில் நிறுவனங்கள் என பெருந்தலைவரின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம். கல்விக் கண் திறந்து, பல தலைமுறைகளை வாழ வைத்துக் கொண்டிருக்கும் கர்மவீரரைப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.