‘அதிகாரத்தில் பங்கு’ என்ற விஜய்யின் அறிவிப்பு பிற கட்சிகளை இழிவுபடுத்தக்கூடியது- கே.பாலகிருஷ்ணன்

 
ச் ச்

கூட்டணிக்கு வந்தால் பதவி என விஜய் கூறி உள்ளது  கூட்டணியில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் செயலாகும் என மதுரையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

CPI (M) will continue to oppose both BJP and AIADMK: Balakrishnan - The  Hindu

மதுரை புதுராமநாதபுரம் சாலை பகுதியில் கட்டப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர முயற்சிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகும் கூட மோடி அரசு பாடம் கற்றுக் கொள்ள மறுக்கிறது. வக்பு வாரிய சட்டத்தை அமுல்படுத்த மோடி அரசு முயற்சிக்கிறது அதை அனுமதிக்க மாட்டோம். தமிழக அரசு மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும். தமிழக அரசு ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்பட கூடாது. அதே வேளையில் மக்களின் வழிபாட்டு உரிமையில் தலையீட விரும்பவில்லை. மக்கள் பிரதிநிதிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும், மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.


தமிழகத்தில் புதிதாக நிறைய கட்சி தொடங்கி உள்ளனர். விஜய் மாநாட்டை விட மிக பிரமாண்டமான விழாக்கள் நடைபெற்றுள்ளது. விஜயகாந்த் கட்சி தொடங்கும் போது விஜய்க்கு வந்த கூட்டத்தை விட பலமடங்கு கூட்டம் வந்தது. விஜய் கட்சி தொடங்கி விட்டார் என்பதற்க்காக கருத்து சொல்ல முடியாது. விஜய் களத்திற்கு வந்த பின்னர் தான் கருத்து சொல்ல முடியும். விஜய்யின் அரசியல் வருகை, அறிவிப்புகளால் திமுக கூட்டணிக்குள் எந்தவொரு சலசலப்பையும் ஏற்படுத்தாது. இது குறித்த கருத்துக்களை திமுக கூட்டணியில் உள்ளவர்கள் மிக தெளிவாக கூறி விட்டனர். மக்கள் பிரச்சினைகளுக்காக திமுக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகளுடனும் பயணித்து வருகிறோம்.

K Balakrishnan News, Photos & Videos in Tamil - News18 தமிழ்நாடு

கூட்டணிக்குள் இருப்பதால் சாம்சங் பிரச்சினையால் தலையிடாமல் இருக்க முடியுமா?, தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறோம். ஆகவே இதற்கும், அதற்கும் சம்பந்தமுமில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் பேசியதை அவர் தான் விளக்க வேண்டும். அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் தான் கூட்டணிக்கு வருவோம் என்பதே தவறானது. கூட்டணிக்கு வந்தால் தான் பதவி என்றால் பதவிக்காக கூட்டணிக்கு வருவது போல ஆகிவிடும். இது கூட்டணியில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் செயலாகும். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எனும் கோஷம் எந்த தாக்கத்தை ஏற்படுத்தி விட போகிறது. பாஜகவை எதிர்க்கும் நிலைபாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, பதவி தருகிறோம் என சொன்னால் கூட திமுக கூட்டணியை உடைக்க முடியாது. விஜய்க்கு யாரோ சொல்லி கொடுத்து உள்ளனர், அதை மேடையில் பேசியுள்ளார்” என கூறினார்.