குழந்தை திருமணம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வழக்குப்பதிவு செய்க- கே.பாலகிருஷ்ணன்

 
k balakrishnan rn ravi

நானே குழந்தை திருமணம் செய்துள்ளேன் என்று கூறிய தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Gov. RN Ravi sticks his nose in Tamil Nadu politics and continues as BJP  leader - K. Balakrishnan Condemns | தமிழ்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து,  பாஜக தலைவராகவே நடக்கிறார் கவர்னர் ஆர் ...

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “மத்திய அரசு பொது சிவில் போர்டு சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறி வருகிறது. ஆனால் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றாமல் உள்ளது. நாடாளுமன்றத்தின் மேலவையில் நிறைவேற்றப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 1986-ம் ஆண்டு குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குடும்பங்களில் ஆண்டுதோறும் குழந்தை திருமணம் நடந்து வந்தது. தற்போது ஆதாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டதால், தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களை கைது செய்த போலீசாரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டிக்கிறார். பெண்களுக்கு இருவிரல் சோதனை நடந்ததாக உண்மைக்கு மாறான தகவலை கூறி வருகிறார்.

நானே குழந்தை திருமணம் செய்துள்ளேன் என்று கூறிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்து, பொதுமக்களிடம் தகராறு செய்து வருகின்றனர். இதை கேட்ட அதிகாரிகளிடம் தகராறு செய்கிறார்கள். ஆகவே தமிழக அரசு தனி சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையிடம் உள்ள கோவில்களை, சொத்துகளை, நகைகளை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் குரல் கொடுத்து வருகிறார்கள். இது எப்படி சாத்தியம்? தனியாரிடம் கொடுத்தால், எப்படி பாதுகாப்பாக இருக்கும்.

K Balakrishnan,அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? - கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்! -  cpim k balakrishnan opinion on actor rajinikanth governor rn ravi meet -  Samayam Tamil

25 ஆண்டுகளாக தமிழகத்தில் கள்ளச்சாராயம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆட்சி மாறினாலும் கள்ளச்சாராயத்தையோ, போதை பொருட்கள் விற்பனையையோ தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்கு அரசு மட்டும் காரணம் அல்ல. போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதால் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. மதுவிலக்கு துறை, காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமல் சாராயம், போதை பொருட்கள் விற்பனை செய்ய முடியாது. காவல்துறையில் வேலை பார்க்கும் சிலரால் ஒட்டு மொத்த காவல் துறைக்கும் அவப்பெயர் ஏற்படுத்துகிறது. ஆகவே தமிழக அரசு கள்ளச்சாராயம் விற்பனை, போதை பொருட்கள் விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

500 மதுக்கடைகளை மூடி உள்ளனர். இது நல்ல நடவடிக்கை. இருப்பினும் படிப்படியாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட நடவடிக்கை வேண்டும். அகில இந்திய அளவில் பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து, எதிர்க்கட்சிகளிடம் ஒரு வலுவான ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. 2014, 2019-ம் ஆண்டு தேர்தல்களில் இப்படி ஒரு ஒற்றுமை ஏற்படவில்லை. மூன்றில் ஒரு பகுதி வாக்கு பெற்று மத்தியில் மீண்டும் , மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடித்து விட்டது. இந்த முறை பா.ஜ.க.வை எதிர்க்கிற அந்த வாக்குகளை எல்லாம், எவ்வளவு அதிகமான ஒற்றுமை ஏற்பட வேண்டுமோ, அந்த அளவுக்கு ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. இந்த ஒற்றுமை மேலும் வளர வேண்டும். 

அகில இந்திய அளவில் ஒரே கூட்டணி என்பது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் உள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை எதிர்த்து எப்படி வலுவான கூட்டணி உள்ளதோ, அதேபோல்  அந்தந்த மாநிலங்களிலும் பா.ஜ.க.வை வீழ்த்த வலுவான கூட்டணி, பலமான கட்சிகள் தலைமையில் அமைய வேண்டும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வீழ்த்தி வெற்றி பெறுவோம். தனியார் பேருந்து விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில் சூறைக் காற்றில் வாழைகள் முறிந்து சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.