அதிகாரத்தை முயற்சித்து மூக்கை உடைத்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர் - கே.பாலகிருஷ்ணன் தாக்கு!!

 
balakrishnan cpm balakrishnan cpm

பாஜக ஆளுநரோ, அரசியல் நோக்கத்துடன் தன்னிடம் இல்லாத அதிகாரத்தை முயற்சித்து  மூக்கை உடைத்துக் கொண்டிருக்கிறார் என்று  கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

rn ravi

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில்,  "அமைச்சர்களின் துறைகளை தீர்மானிப்பதும், மாற்றுவதும்‌ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின்‌ தனிப்பட்ட அதிகாரம். இதில் ஆளுநரின் ஒப்புதலுக்கான‌ அவசியமே இல்லை. துறை மாற்றம்‌ பற்றிய தகவலை ஆளுநருக்கு தெரிவிப்பது ஜனநாயக மரபின் வெளிப்பாடு. பாஜக ஆளுநரோ, அரசியல் நோக்கத்துடன் தன்னிடம் இல்லாத அதிகாரத்தை முயற்சித்து  மூக்கை உடைத்துக் கொண்டிருக்கிறார்.



இந்தமுறை அவரால் தமிழ்நாட்டில் அரங்கேற்றும் நாடகம் இங்கேதான் முதல்முறை அரங்கேறுவதல்ல.‌ பாஜகவின் எதேச்சதிகார நோக்கத்தின் வெளிப்பாடு. ஏற்கனவே கேரளத்திலும் முயற்சித்து அம்பலப்பட்டு அடிபட்டது.தமிழ்நாட்டு மக்களும் தக்க பாடம் புகட்டுவார்கள். " என்று குறிப்பிட்டுள்ளார்.