“பாமக குடும்ப கட்சியாக மாறிவிட்டது... 9ஆம் தேதி புதிய கட்சி தொடங்கவுள்ளேன்”- காடுவெட்டி குரு மகள்

 
் ்

மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ.குரு மகள் குரு.விருதாம்பிகை வரும் 9 ஆம் தேதி சேலத்தில் புதிய கட்சி தொடங்குகிறார்.

இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்தித்த காடுவெட்டி ஜெ.குரு மகள் குரு.விருதாம்பிகை, “எங்கள் கட்சி பெயர் ஜெ. குரு பாட்டாளி மக்கள் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஒன்பதாம் தேதி சேலத்தில் பேரணையுடன் கட்சியை தொடக்க விழா நடைபெறுகிறது. வன்னியர் சமூக மக்களுக்கு யாரும் எதுவும் செய்யவில்லை. எங்களுடைய கொள்கை சமூக நீதிக் கொள்கை. 

பாட்டாளி மக்கள் கட்சியில் ஒற்றுமை இல்லை. அவர்கள் கொள்கையை, விட்டு குடும்பத்தை கட்சியில் கொண்டு வந்தார் ராமதாஸ். கொள்கையில் இருந்து தளர்ந்து அன்புமணி ராமதாஸ்க்காக தன்னுடைய நிலையில் இருந்து மாறி இருக்கிறார். எங்களுக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ்க்கு துரோகம் செய்துவிட்டார்கள். ராமதாஸ் - அன்புமணி சண்டையால் பாட்டாளி மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ராமதாஸிற்கு உண்மையாக ஜெ.குரு மட்டுமே இருந்தார். பெரியய்யா, சின்னய்யா என்ற மரியாதை எப்பொழுதும் இருக்கிறது. ஆனால் அவர்கள் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள். தற்போது தான் கட்சி தொடங்கியுள்ளதால் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. யாரை ஆதரிக்கப் போகிறோம் என்பதையும் முடிவு செய்யவில்லை” என்றார்.