கலைஞரின் உழைப்பையும், சமூகநீதி சிந்தனையையும் நினைவு கூர்வோம் - அன்புமணி ட்வீட்

 
tn

கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளில் அவரது உழைப்பையும், சமூகநீதி சிந்தனையையும் நினைவு கூர்வோம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

kalaignar

கால்பதித்த கலை, எழுத்து, அரசியல் மற்றும் ஆட்சிப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தனித்தன்மையோடு தன் முத்திரையைப் பதித்தவர் கலைஞர் கருணாநிதி.  80 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கும், போராட்ட வாழ்க்கைக்கும் சொந்தமானவர்; உலக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் பேரியக்கத்திற்கு அரை நூற்றாண்டுக் காலம் அசைக்கமுடியாத ஜனநாயகத் தலைவராக வலம் வந்தவர்.  போட்டியிட்ட அனைத்து  தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே பரிசாக பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள நிலையில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் இனி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்து வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறது. 



இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளில் அவரது உழைப்பையும், சமூகநீதி சிந்தனையையும் நினைவு கூர்வோம்! 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான  கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் இன்று. உழைப்புக்கு எடுத்துக்காட்டு அவர் தான். சமூகநீதி கோரிக்கைகளை செவிமடுத்தவர். அவரது பிறந்தநாளில் அவரது சிறப்புகளை நினைவு கூர்ந்து  போற்றுவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.