கலைஞர் 102 : நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

 
கலைஞர் 102 : நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை! கலைஞர் 102 : நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102வது பிறந்த நாளையொட்டி பல்வேறு இடங்களை உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைகள் மற்றும் படங்களுக்கு முதலமைச்சர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.  

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், கலைஞரின் பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் ஜூன் 3ம்  நாளான இன்று செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது . இதனையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள அவருடைய சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அவருடைய திருவுருவப்படத்திற்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். 

Image

பின்னர் அங்கிருந்து மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா மற்றும்  கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நினைவிடத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், இனிப்புகளையும் வழங்கினார்.  இதன் தொடர்ச்சியாக சென்னை ஓமந்தூரார்  தோட்ட வளாகத்தில் நிருவப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். 

Image

மேலும், கலைவானர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைஞர் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளார். இந்த விழாவில் கலைஞர் பிறந்தநாளையொட்டி சிறப்பு பட்டிமன்றம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.