வள்ளுவரின் பெயருள்ள வரையில் கலைஞரின் புகழ் நிலைக்கும் - திருமா ட்வீட்

 
tn

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  தமிழக முதல்வரும்,  திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் இன்று அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.

5h

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் பேரணி முடிவடைந்த நிலையில்,  முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், முத்தமிழறிஞர் #கலைஞரின் நினைவுநாளான இன்று (ஆக.07) அவர்  தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.

சென்னையில் வள்ளுவர் கோட்டமும் குமரியில் வானுயர திருவுருவச் சிலையும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிற  வள்ளுவத்தின் மீது கலைஞருக்குள்ள தீவிர ஈடுபாட்டை உணர்த்தும். 

வள்ளுவர் விரும்பிய சமத்துவமே கலைஞரின் வேட்கை. அதன் சான்றே 'பெரியார் நினைவு சமத்துவபுரம்' .

வள்ளுவரின் பெயருள்ள வரையில் கலைஞரின் புகழ் நிலைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.