12ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்... பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை!

 
Suicide Suicide

குள்ளக்குறிச்சி அருகே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறி தந்தை திட்டியதால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏர்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 08ம் தேதி வெளியானது. பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். 4.05 லட்சம் மாணவிகளும், 3.47 லட்சம் மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்தது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
இந்த நிலையில், குள்ளக்குறிச்சி அருகே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறி தந்தை திட்டியதால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏர்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் கிராமத்தில் +2 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் 
எடுத்ததாக கூறி தந்தை திட்டியதால் மாணவன் கவியரசன் தற்கொலை செய்துகொண்டார்.