பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

 
அதிமுக

கடந்த மக்களவை தேர்தலில் விழுப்புரத்தில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது, அதே கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில்  அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,


திரு. M. கிருஷ்ணன்,
கள்ளக்குறிச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் )


திரு. அரசூர் சிவா (எ) N. சிவக்குமார்,
(கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் )


ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.